திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நாளை அனைத்து இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, அனைத்து இறைச்சிக் கூடங்களும் நாளை மூடப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் நாளை ஒரு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதியை மீறி இறைச்சி விற்பனை செய்தால், பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், இறைச்சி விற்பனையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
newstm.in