
இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 42 ரன்களில் வெளியேற, அதிரடியாக ரன்களை சேர்த்த சுப்மன் கில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார்.
ஷ்ரேயாஸ் அய்யர் 38 ரன்களும், கே.எல்.ராகுல் 7 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களும், அக்சர் படேல் 2 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா, லஹிரா குமாரா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கை இலங்கை பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் நுவனிது பெர்னான்டோ 19 ரன்களை எடுத்தார்.
கேப்டன் தசுன் ஷனகா 11 ரன்களும், கசுன் ரஜிதா 13 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

அற்புதமாக பந்துவீசிய சிராஜ் இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ், முகம்மது ஷமி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு அளிக்கப்பட்டது.
newstm.in