
சேலம் குகை மாரியம்மன் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாத முதல் நாளில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் திருக்கோவிலில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா நடைபெற்றது. அதிகாலை முதல் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உலகம் செழிப்பாக இருக்கவும், குடும்பம் சந்தோஷமாக திகழவும் வேண்டி இருந்த பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் தங்கள் உடலில் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர்.

கத்தி போடுதலின் போது ஆடல், பாடலுடன் மார்பிலும், கையிலும், கத்தியால் காயத்தினை ஏற்படுத்தி கோஷங்கள் எழுப்பியவாரு அம்மனை அழைத்தனர் .
இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செவ்வாய்பேட்டை கரி மார்கெட் பகுதியில் அம்மனை அழைத்து உடலில் கத்திப் போட்டுக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்தின் போது சிவன், பெருமாள், அம்மன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களை தத்ரூபமாக வேடம் தரித்து ஆடி பாடி தெய்வங்கள் ஊர்வலமாக சென்றது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
newstm.in