டெல்லியில் ஹன்ஸ்ராஜ் கல்லூரி விடுதியில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இக்கல்லூரி விடுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். கொரோனா காலத்திற்கு முன்பு விடுதியில் மாணவர்களுக்கு அசைவம் கலந்த உணவு முறையே கடைப்பிடிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா ஊரடங்கு முடிவடைந்து கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டு விடுதி செயல்பட தொடங்கியதில் இருந்து அசைவ உணவு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் அசைவ உணவு வழங்கப்படுவதில்லை எனப் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரி விடுதியில் படிக்கு வெளிநாட்டு மாணவர்கள் உணவு பிரச்னை காரணமாக விடுதியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த கல்லூரி முதல்வர் ரமா சர்மா, விடுதியில் உள்ள 90 சதவீதம் பேர் சைவம்தான் என்றும், அசைவ உணவுகளை விரும்புவோர், விடுதிக்கு வெளியே சென்று சாப்பிட்டுக் கொள்ளத் தடையில்லை என்றும் கூறியுள்ளார்.
newstm.in