பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இவரின் மரணம் பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகர் சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து இருந்தார். பின்னர் தொலைக்காட்சி டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.
2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் தான் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங். அதற்கு பிறகு இவர் சில படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் ரீல் தோனியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தார் சுஷாந்த். பிறகு பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தார். மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், மருத்துவ ஆலோசனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான் சுஷாந்த் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. இவரின் தற்கொலைக்கு காரணம் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ, அமலாக்கத்துறை, போதைப்பொருள் ஆகிய 3 பிரிவுகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது சுஷாந்த் சிங் உடலை உடற்கூராய்வு செய்த ரூப் குமார் என்பவர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டர். உடற்கூராய்வு செய்யும் போது அவரது உடலில் அதிக காயங்கள் இருந்ததாக கூறினார்.
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் சகோதரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் சுஷாந்த் சிங் ஆசையாக வளர்த்த நாய் ஃபட்ஜ் உயிரிழந்து விட்டது என பதிவிட்டிருந்தார். சுஷாந்த் சிங்குடன் இந்த நாய் அதிக நேரத்தை பகிர்ந்து அவரின் துக்கங்களின் போது அவருக்கு ஆறுதலாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சுஷாந்த் சிங் சகோதரி போட்டிருந்த பதிவில் “உனது நண்பர் சுஷாந்த் சிங்வுடன் சேர்ந்து விட்டாய் இதயம் உடைந்து விட்டது என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.