உடனே அப்ளை பண்ணுங்க..!! மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை..!! ரூ.1.6 லட்சம் வரை சம்பளம்…!!

NHPC நிறுவனத்தில் பொறியியல்/சிஏ/மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு ரூ.1.6 லட்சம் வரை சம்பளத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவில்/எலெக்டிரிகல்/மெக்கானிக்கல் போன்ற பாடங்களில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள், சிஏ, மேனேஜ்மென்ட் பிரிவுகளில் சட்டம் படித்தவர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

இப்பணியிடங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

சிவில்/எலெக்டிரிகல்/மெக்கானிக்கல் பிரிவுகளில் Trainee Engineer பணிகளுக்கு ஏற்ற பாடங்களில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Trainee Officer (Finance) பணிக்கு டிகிரியுடன் CA முடித்திருக்க வேண்டும்.

Trainee Officer (Hr) பணிக்கு Management சார்ந்த பாடங்களில் முதுகலைப் பட்டம் /முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

Trainee Officer (law) பணிக்குச் சட்டத்தில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

பொறியியல் பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுந்தவர்கள் GATE 2022 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். Trainee Officer(Finance) பணிக்கு CA தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் விதம் தேர்வு செய்யப்படுவர்.Trainee Officer(Hr) பணிக்கு UGC NET 2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Trainee Officer (law) பணிக்கு CLAT 2022 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

GATE,CA,UGC NET,CLAT தேர்வுகளில் கலந்துகொண்டவர்கள் மட்டும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும். தகுந்தவர்கள் http://www.nhpcindia.com/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://intranet.nhpc.in/tr_rectt/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.01.2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.