தமிழகத்தில், பட்டதாரி ஆசிரியர் பணி தகுதிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் கணினி வழியில் ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் கணினி வழியில் நடைபெற்றது. அதன் முடிவுகள் டிசம்பர் 7-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் இரண்டாம் தாளுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, டெட் இரண்டாம் தாள் தேர்வை ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையான காலகட்டத்தில் கணினி வழியில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், இரண்டாம் தாள் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாதிரி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை http://trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.