மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார், பிரேம் நசீர், கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் பனிபுரிந்துள்ளார்.
இவர் ஆங்கில படம் உட்பட தமிழ், கன்னடா, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற 9 மொழி படங்களில் 1200க்கும் மேற்பட்ட படங்களை பணியாற்றியுள்ளார். மேலும் 63 கதாநாயகர்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்ததன் மூலம் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி, கமல் ரஜினி, விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுக்கும் ஸ்டண்ட் பயிற்சி அளித்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்.
ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்னம்தான் சண்டை இயக்குநராக இருந்திருக்கிறார்.
2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார் ஜூடோ ரத்னம்.
இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவால் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் காலமானார். 93 வயதான அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக ஸ்டண்ட் யூனியன் சங்க அலுவலகத்தில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.