
பதான் படத்தினல் ஷாருக்கான் முகத்தை எடிட் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் வெளிவந்த பெரிய ஹீரோக்கள் படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்து வந்த நிலையில், தற்போது ஹிந்தி திரைத்துறைக்கு சுவாசம் கொடுத்துள்ளது ஷாருக்கானின் பதான்.
படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. நேற்று வரை இந்த திரைப்படம் உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதான் திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருவதால் படக்குழுவினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. அடுத்தடுத்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பதான் படத்தின் பாடல் காட்சிகளை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இதில் அவர், ஷாருக்கானை போன்ற தோற்றத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் உள்ளன.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் வார்னரை புகழ்ந்து வருகின்றனர். அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
டேவிட் வார்னர் இந்திய படங்களை, பாடல்களை ரீல்ஸ் செய்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பதான் படத்தின் காட்சிகளை வெளியிட்டு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
newstm.in