ஒடிஷாவில் காவல் ஆய்வாளரால் சுடப்பட்ட அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில், சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் நபா தாஸ், ஜார்சுகுடா மாவட்டம் பிரஜராஜ்நகர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்.
அப்போது அவர் காரை விட்டு இறங்கியதும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர் அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். குண்டடிப்பட்ட அமைச்சர் சரிந்து கீழே விழுந்தார்.
அப்போது உள்ளூர் காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய கோபால் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலில் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மேல் சிகிச்சைக்காக புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார். இந்த விவகாரம் ஒடிஷா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in