Pooja Hegde: கல்யாண போட்டோக்களை ஷேர் செய்த பீஸ்ட் ஹீரோயின்… பதறிப்போன ரசிகர்கள்!

திருமண போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை ஷாக்காக்கி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

பீஸ்ட் ஹீரோயின்மகாராஷ்டிர மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்டவர் நடிகை பூஜா ஹெக்டே. 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான முகமூடி படத்தில் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பே இல்லாமல் இருந்த பூஜா ஹெக்டே, கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி ஆனார். ​ Dancer Ramesh Death: என்னது.. அவர நான் கொன்னுட்டேனா.. அன்னைக்கு நடந்தது இதுதான்.. இன்பவள்ளி பரபர!​
டாப் நடிகர்களுடன்இருப்பினும் இந்த இடைப்பட்ட காலத்தில் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து விட்டார் பூஜா ஹெக்டே. தெலுங்கு மற்றும் இந்தியில் டாப் நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை பூஜா ஹெக்டே அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். ​ விக்கிக்கு வொர்கவுட் ஆகல … நயன்தாராவுக்கு ஆகுது!​
யாருக்கு கல்யாணம்?அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் பதறி போயுள்ளனர். அதாவது நடிகை பூஜா ஹெக்டே, தனது சமூக வலைதள பக்கத்தில் தனது அண்ணனின் திருமண போட்டோக்களை ஷேர் செய்து உள்ளார். அதில் பட்டு சேலையில் யாருக்கு கல்யாணம்? யார் மணப் பெண் என்று தெரியாத அளவுக்கு மணப் பெண்ணுக்கு போட்டியாக அழகு பதுமையாக ஜொளித்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. ​ Dancer Ramesh Death: முதுகு பிளந்திருந்தது… உடல் மோசமாக கிடந்தது… டான்ஸர் ரமேஷின் தாய் திடுக்!​
ஆனந்த கண்ணீர்மேலும் அந்த போட்டோக்களுக்கு என் அண்ணன் தன் வாழ்க்கையின் உயிரை திருமணம் செய்து கொண்டார்! இந்த வாரம் முழுக்கவே ஒரு ரோலர்கோஸ்டர் போல் இருந்தது! அண்ணன் திருமணத்தில்6 ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கிறேன், குழந்தையைப் போல சிரித்திருக்கிறேன். அண்ணா, உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் அடியெடுத்து வைக்கும் போது, நீங்கள் கட்டுப்பாடில்லாமல் நேசிப்பீர்கள், உங்கள் முழு மனதையும் கொடுங்கள். ஒருவருக்கொருவர் அமைதி மற்றும் புரிதலைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். அழகான அற்புதமான மணமகள், எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார். ​ Bayilvan Ranganathan: அவரு பொண்ணுங்க விஷயத்துல அந்தமாதிரி… அர்ஜூன் குறித்து புட்டு புட்டு வைத்த பயில்வான்!​
ஷாக்காகி விட்டோம்பூஜா ஹெக்டேவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் உங்களுடைய திருமணம் எப்போது என்றும் பூஜா ஹெக்டேவிடம் கேள்விகளை கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இன்னும் சில நெட்டிசன்கள் இந்த போட்டோக்களை பார்த்ததும் உங்களுக்கு தான் திருமணம் போல என நினைத்து ஷாக்காகி விட்டோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர். பூஜா ஹெக்டே ஷேர் செய்துள்ள இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருவதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது.
​ AK 62, Vignesh Shivan: ஏகே 62லிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட இதான் காரணமா? பிரபல பத்திரிகையாளர் பரபரப்பு தகவல்!​
Pooja Hegde

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.