கேரள உணவக ஊழியர்களுக்கு மருத்துவ சான்று கட்டாயம்| Medical certificate is mandatory for Kerala restaurant workers

திருவனந்தபுரம், கேரளாவில், உணவு தயாரித்து, விற்பனை செய்யும், ஹோட்டல்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் தொற்று நோய் மற்றும் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை என்ற மருத்துவ சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு உணவு கலப்படம் மற்றும் தரமற்ற உணவு உட்கொண்டதினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கோட்டயம் மருத்துவக் கல்லுாரி … Read more

குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம்

முன்னணி நடிகையான குஷ்பூ பாரதிய ஜனதா கட்சியிலும் இடம் பெற்று இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தனது காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்காகத்தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்த அவர், இதற்காக எனது பயணத்தை நிறுத்திக்கொள்ள போவதில்லை என்றும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வெளியூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார் குஷ்பு. அப்போது தான் அமர்ந்து செல்வதற்கு சக்கர நாற்காலி கிடைக்காமல் அவதிப்பட்டதாக வருத்தத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதோடு அந்த … Read more

சென்னையில் இந்த வாரம்: பிப்ரவரி மாதத்தை ஸ்டாண்ட்-அப் காமெடி மற்றும் இசை கச்சேரிகளுடன் கொண்டாடுங்கள்!

சென்னையில் இந்த வாரம்: பிப்ரவரி மாதத்தை ஸ்டாண்ட்-அப் காமெடி மற்றும் இசை கச்சேரிகளுடன் கொண்டாடுங்கள்! Source link

கோயில்களின் போலி இணையதளங்களை முடக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தமிழகத்தில் கோயில்களின் பெயரில் உள்ள போலி இணையதளங்களை முடக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை, இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயணன் பிரசாத் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது  இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், “தமிழகம் முழுவதும் கோயில் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான மற்றும் போலி இணையதளங்களை முடக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதுமட்டுமல்லாமல், போலி இணையதளங்களை … Read more

தமிழக கோயில்களின் பெயர்களில் செயல்படும் போலி இணையதளங்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் கோயில்களின் பெயர்களில் செயல்படும் போலி இணையதளங்களை முடக்கவும், அதை நடத்துவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய கோயில்களின் பெயர்களில் செயல்படும் இணையதளங்களை முடக்கவும், அந்த இணையதளங்களை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில் சென்னை கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய … Read more

ஒரு இரவுக்கு ரூ.14 லட்சம்! ரொனால்டோவும் ஜார்ஜினாவும் தங்கும் ஆடம்பர சவுதி அரேபிய ஹோட்டல் அறை

சவூதி அரேபியாவில் ரொனால்டோ அவரது குடும்பத்துடன், ஒரு இரவுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ஓட்டல் அறையில் தற்காலிகமாக தங்கியுள்ளார். ஒரு இரவுக்கு ரூ.14 லட்சம் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவரது காதலி ஜார்ஜினாவும் சவுதி அரேபியாவில் தங்கும் ஆடம்பர ஹோட்டல் அறைக்கான வாடகை ஒரு இரவுக்கு 3,500 யூரோக்கள் ஆகும். இது இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.14 லட்சம் ஆகும். கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்-நஸ்ர் கிளப்பிற்கு ஒப்பந்தம் செய்யப்பட பிறகு, அவருடன் … Read more

கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு

தூத்துக்குடி: கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கோர்ட் விடுதலை செய்துள்ளது. ஆறுமுகநேரி நகர திமுக செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவரை கடந்த 2011 மார்ச் 1ல் ஆறுமுகநேரி பஜாரில் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்தனர். இந்த வழக்கில் … Read more

இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்

மும்பை: நடிகை இலியானா, மருத்துவமனையில் இருந்தவாறே, அவரது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் அவர் என்ன நோய்க்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார் என்ற குழப்பம் நீடிக்கிறது. தமிழில் கேடி, விஜய்யுடன் நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இலியானா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்டே சில செல்ஃபி படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘எனக்கு மூன்று பேக் IV என்ற திரவ ஊசி போடப்பட்டுள்ளது. … Read more

வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன்

தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்று அங்கு முன்னணி நடிகர் ஆனவர் சந்தீப் கிஷன். தற்போது தெலுங்கு, தமிழில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவரும் மைக்கேல் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசனுக்காக வந்துள்ள அவர் அளித்த பேட்டி வருமாறு: இந்த படம் என் கேரியரில் முக்கியமான படம். பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம். இரண்டு ஆண்டுக்கு மேல் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறேன். 1970 முதல் 1990 வரை நடக்கிற மாதிரியான கதை. ஒரு பெண்ணுக்காக … Read more

பாக்., மசூதி தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு | Death toll rises to 100 in Pakistan mosque suicide attack

பெஷாவர் பாகிஸ்தான் மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் ௬௧ பேர் பலியாகி இருந்த நிலையில்,நேற்று பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பெஷாவர் நகரில், பல அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கூடிய ஒரு மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான போலீசார், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, திடீரென … Read more