நகராட்சி கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர்கள்

தக்கலை: குமரி மாவட்டம் பத்மாபபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் அருள் சோபன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது 4ம் வார்டு கவுன்சிலர் மும்தாஜ் (சுயே), 13ம் வார்டு கவுன்சிலர் சபினா (சுயே) ஆகியோர், ரூ.4.47 கோடியில் நகராட்சி சாலைகள் செப்பனிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், எங்கள் வார்டுகளை ஏன் தேர்வு செய்யவில்லை? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரேன இரு பெண் கவுன்சிலர்களும் நடுபகுதிக்கு சென்று,  கேனில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க … Read more

ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா

லாஸ்ஏஞ்சல்ஸ்: பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸை காதலித்து மணந்தார். இந்த தம்பதியின் மகள் மால்டி மேரிக்கு தற்போது ஒரு வயது ஆகிறது. தனது மகளின் முகத்தை இதுவரை வெளியே காட்டாமல் இருந்த பிரியங்கா சோப்ரா, தற்போது முதன் முறையாக தனது மகளின் முகத்தை பொதுவெளியில் காட்டியுள்ளார். க்யூட்டான அந்த குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது, ‘மகளின் முகத்தை … Read more

மறு ஆய்வு மனு விசாரணை மத்திய அரசின் கோரிக்கை ஏற்பு| Re-examination Petition Hearing Acceptance of Central Governments request

புதுடில்லிபினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில், 2016ல் மேற்கொண்ட திருத்தங்களில் சில பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதை மறு ஆய்வு செய்யக்கோரிய மத்திய அரசின் மனுவை, நேரடி விசாரணைக்கு ஏற்க பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில், 2016ல் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், இரண்டு பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. … Read more

அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு

கார்த்திகேயன் என்பவர் இயக்கத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி ஐயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹாரர் படம் கருங்காப்பியம். யோகி பாபு, கலையரசன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பே எதிர்காலத்தில் நடக்கப் போவதை கணித்து எழுதப்பட்டுள்ள கருங்காப்பியம் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஹாரர் திரில்லர் படமாக இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க அமானுஷ்ய கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த கருங்காப்பியம் படத்தின் டிரைலர் தற்போது … Read more

36 சதவீதம் லாபத்தை இழந்த பாரத் பெட்ரோலியம்.. 44% சரிந்த பஞ்சாப் நேஷனல் வங்கி

36 சதவீதம் லாபத்தை இழந்த பாரத் பெட்ரோலியம்.. 44% சரிந்த பஞ்சாப் நேஷனல் வங்கி Source link

#ஈரோடு:: படுகொலை செய்யப்பட்ட நா.த.க நிர்வாகிக்கு சீமான் இரங்கல்..!!

ஈரோடு கிழக்கு தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் பொருளாளராக இருந்து வரும் கார்த்திகேயன் மற்றும் அவருடைய அண்ணன் கௌதம் ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர். ஈரோடு மாநகர் கிருஷ்ணசாமி வீதியில் வசித்து வருபவர் மகேஸ்வரிக்கும் இவருடைய சகோதரர் ஆறுமுகசாமிக்கும் இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. தனது அக்கா மகன்களான கௌதம் மற்றும் கார்த்திகேயனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஆறுமுகசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து மகேஸ்வரியின் வீட்டிற்கு நேரில் வந்த ஆறுமுகசாமி தகராறில் ஈடுபட்டுள்ளார். … Read more

ரூ.10 நாணயங்கள், காந்தி, தராசு, செருப்பு… – ஈரோடு கிழக்கு தொகுதியில் குறியீடுகளால் கவனம் ஈர்த்த சுயேட்சைகள்!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஜன.31) தொடங்கிய நிலையில், சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களின் வித்தியாசமான, ‘செய்கை’கள் மற்றும் பேட்டிகளால் மாநகராட்சி அலுவலகம் கலகலப்பாக காணப்பட்டது. வேட்புமனு தாக்கல் தொடக்கம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான க.சிவகுமார் வேட்புமனுக்களை … Read more

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு

தனது குழந்தைகள் தாங்களே உழைத்து முன்னேற வேண்டும் என்பதற்காக, பிரித்தானிய கோடீஸ்வரர் ஒருவர் செல்வத்தில் 99 சதவீதத்தை தானமாக வழங்க திட்டமிட்டுள்ளார். கடினமாக உழைக்கவும் திறமைகளை வளர்க்கவும் குழந்தைகளை ஊக்கப்படுத்த சிறந்த வழி எது? என்றால், ஒன்று அவர்களுக்கு வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுப்பது, மற்றொன்று வாழ்க்கையில் எல்லா விடயங்களும் எளிதாக கிடைக்கச்செய்யாமல் இருப்பது. சுயமாக உழைத்து கோடீஸ்வரரானவர் சுயமாக உழைத்து கோடீஸ்வரரான, பிரித்தானியரான டேவ் ஃபிஷ்விக் (Dave Fishwick), தனது சொத்துக்களில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்குவதாகவும், … Read more

களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்

பழநி: தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் பழநி நகரம் மீண்டும் களைகட்ட துவங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இந்தத் திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்வர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா ஜன. 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் பிப். 3ம் தேதியும், தைப்பூச தேரோட்டம் பிப். 4ம் … Read more

ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்

ஐதராபாத்: நானி நடிக்கும் தசரா பான் இந்தியா படத்தின் டீசரை ராஜமவுலி, தனுஷ் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து அதில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார் நானி. தெலுங்கில் அவர் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் தசரா. இந்த படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் திரையிட உள்ளனர். வரும் மார்ச் 30ல் படம் ரிலீசாகிறது. அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்குகிறார். சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இதில் நானி ஜோடியாக … Read more