
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணியில் காலியாக உள்ள 1,083 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித்துறை, நகர் ஊரமைப்பு துறை மற்றும் தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை ஆகிய துறைகளில் பொறியியல் சார்நிலைப் பணிகளில் உள்ள 1,083 காலிப்பணியிடங்கள் நேரடி நியமன அடிப்படையில் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது.
இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் மார்ச் மாதம் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கான அவகாசம் 09.03.2023 முதல் 11.09.2023 வரை வழங்கப்பட்டுள்ளது. தேர்வானது, தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு மே மாதம் 27ஆம் தேதி காலையும், மதியமும் நடைபெறும்.

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் கட்டாய தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும். விருப்பமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/என்ற டிஎன்பிஎஸ்சியின் இணையத்தளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
newstm.in