ரஜினிகாந்த், கமல்ஹாசனின் படங்களில் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மோத உள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.
இப்போதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் தமிழ்நாட்டிற்கே கொண்டாட்டம் தான். பலமுறை ரஜினி, கமல் படங்களில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருக்கின்றன.
அந்த வகையில் கடைசியாக, 2005ஆம் ஆண்டு சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகின. அதில் சந்திரமுகி 500 நாட்களை கடந்து ஓடியது. மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
அதன் பின்னர் ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் ஜெயிலர் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். படத்தில் ரஜினியுடன் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளனர். இந்த படத்திற்கும் அனிருத் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி வெளியானால் 18 வருடங்களுக்கு பிறகு ரஜினி, கமல் ஆகிய இருவரும் நேரடியாக மோதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in