காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் அருகே நகைக்காக சொந்த பேரனே பாட்டியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலேரி கிராமத்தை சேர்ந்த யசோதா அம்மாள் (70) என்பவர் ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இரவு உறங்க சென்ற யசோதா அம்மாள் மறுநாள் மதியம் வரை வெளியே வரவில்லை.
இதனையடுத்து அருகில் வசிப்போர் வீட்டிற்கு சென்று பார்த்த போது யசோதா அம்மாள் தலை நசுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஊர்மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலையாளி யார் என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
யசோதா அம்மாளின் பங்காளியான வெங்கடேசன் என்பவரின் மகனான சதீஷ் என்பவர் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. அவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.
சுங்குவார்சத்திரம் போலீஸார் சதீஷ் (எ) சக்திவேலை முறையாக விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். சதீஷ் குடும்பத்தார் யசோதாம்மாளிடம் கடன் வாங்கி இருந்தனர்.
அதற்கான வட்டியை கேட்டு யசோதா அம்மாள் தொல்லை செய்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் யசோதம்மா கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின்னர் அம்மி கல்லை எடுத்து தலையில் போட்டு முகத்தை சிதைத்ததாக கூறினார்.
யசோதா அம்மாளை கொலை செய்துவிட்டு அவர்கள் வீட்டில் இருந்த 30 ஆயிரம் பணத்தையும் சுமார் 17 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்ததையும் விசாரணையின் போது அவர் ஒப்புக்கொண்டார்.
newstm.in