ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியே அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்தது.
இதையொட்டி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. அதனை முறைப்படி பூர்த்தி செய்து நேற்று இரவு 7 மணிக்குள் ஒப்படைக்குமாறு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தி இருந்தார்.
இந்தநிலையில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லி செல்ல உள்ளதாகவும், பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் கடிதத்தை அவர் ஓரிரு நாளில் டெல்லி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.