
கடை திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற பிரபல மலையாள நடிகை ஹனிரோஸ் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மலையாளப் படங்கள் மூலம் அறியப்பட்ட ஹனிரோஸ் தற்போது தெலுங்கி திரையுலகிலும் கால் பதித்துள்ளார். பாலகிருஷ்ணா உடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்ததை அடுத்து ஆந்திராவிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் மன்னார்காட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடையை திறப்பதற்காக சிறப்பு விருந்தினராக ஹனிரோஸ் சென்றிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார மாவட்டங்களை ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.
கூட்டத்தை பார்த்து பவுன்சர்களும், காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அளவுக்கு எதிர்பாராத விதமாக கூட்டம் கூடியது. கடையை திறந்துவிட்டு ஹனிரோஸ் புறப்பட்ட போது செல்ஃபி எடுக்க ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
காவல்துறையினர் மற்றும் பவுன்சர்களால் ரசிகர்களை தடுக்க முடியவில்லை. சிலர் அவர் மீது விழுந்தனர். இதற்கிடையே ஹனி ரோஸ் பவுன்சர்களின் உதவியுடன் காரில் ஏறிச் சென்றார். அந்த வீடியோவை ஹனி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
newstm.in