டி-மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிஷன் தமானி மும்பையில் ரூ.1238 கோடிக்கு 28 சொகுசு மாடி குடியிருப்புகளை விலைக்கு வாங்கியுள்ளார்.
இன்றைக்கு எங்கும் மிகப்பெரிய அளவில் நடைபெறும் பிசினஸ் என்றால் அது ரியல் எஸ்டேட் தான். நாட்கள் ஆக ஆக மவுசு கூடுமே தவிர, ரியல் எஸ்டேட் தொழிலுக்கு குறைய வாய்ப்பே இல்லை. நிலம் தான் முக்கிய வியாபாரம்.
இந்நிலையில், டி-மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிஷன் தமானி மும்பையில் ரூ.1238 கோடிக்கு 28 சொகுசு மாடி குடியிருப்புகளை விலைக்கு வாங்கியுள்ளார்.
மும்பையில் கடலை ஒட்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும், முக்கிய இடங்களில் உள்ள சொகுசு வீடுகளையும் வி.ஐ.பி.க்கள் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர்.
அந்தவகையில் வொர்லி பகுதியில் 23 சொகுசு வீடுகள் சுமார் ரூ.1,200 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் 23 சொகுசு வீடுகளை வாங்கி உள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உடையது. ஒவ்வொரு வீடும் ரூ.50 முதல் 60 கோடி மதிப்பு மிக்கது என்று கூறப்படுகிறது. வீடுகள் தொழிலதிபரும், கட்டுமான நிறுவன உரிமையாளருமான சுதாகர் ஷெட்டியிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை இவ்வளவு பெரிய தொகைக்கு ரியல் எஸ்டேட்டில் பணப்பரிவர்த்தனை நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. 1,82,084 சதுர அடி பரப்பளவில் மும்பையில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகள் வாங்கப்பட்டுள்ளன.
newstm.in