ஒரு இளைஞர் மூன்று சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சகோதரிகளான கேத், ஈவ், மேரி ஆகிய மூவரும் ஒன்றாக பிறந்தவர்கள். பார்ப்பதற்கும் ஒரே மாதிரியாக இருக்கின்றனர். அவர்கள் மூவரும் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற நபரை திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
முதலில் கேத் என்ற பெண்ணை ஸ்டீவோ சந்தித்துள்ளார். பின்னர், அவர் மூலம் மற்ற இரு சகோதரிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் பழகிய பிறகு மூன்று பேரையும் திருமணம் செய்ய முடிவு செய்ததாக ஸ்டீவோ கூறியுள்ளார்.
சகோதரிகள் மூன்று பேரை திருணம் செய்து கொண்டாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். பிரச்னை இல்லாமல் சமாளிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று பேருடனும் சமமாக நேரம் செலவிட அட்டவணை போட்டு பின்பற்றி வருவதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். ஆனால் குடும்பம் மற்றும் பிற தேவைகளை செய்ய தங்களது சிரமமாக இருப்பதாக அப்பெண்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த சூழல் தொடக்கத்தில் இப்படி இருப்பது இயல்பே. காலம் செல்ல செல்லத்தான் சுமூகமான வாழ்க்கை தொடர்கிறதா என்பதை சொல்ல முடியும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in