
ஒட்டகம் ஒன்று தனது உரிமையாளரின் தலையை கடித்து குதறிய சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகானர் மாவட்டம் பஞ்சு கிராமத்தைச் சேர்ந்த சோஹன்ராம் நாயக் என்பவர் ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த போது, ஒரு ஒட்டகம் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியது. ஒட்டத்தைக் கட்டுப்படுத்த சோஹன்ராம் முயற்சி செய்தார்.
ஆவேசத்துடன் இருந்த ஒட்டகம் அவரது தலையை கடித்து துண்டாக்கியது. தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் சடலமாக கிடந்த சோஹன்ராமை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆவேசத்துடன் இருந்த ஒட்டகத்தை கடுமையாக தாக்கினர்.
அந்த ஒட்டகத்தை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கி முகத்தைச் சிதைத்து கொன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒட்டகத்திற்கு மனநலம் பாதித்துவிட்டதால் அடித்து கொலை செய்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்த்த உரிமையாளரையே ஒட்டகம் கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in