ஐக்கிய அமீரகத்தில் மணல் மேட்டில் கருப்பு பிளாஸ்டிக் பைக்குள் ஆணின் சடலம் பார்த்து பிரித்தானிய தம்பதி மிரண்டு போயுள்ளது.
பிரித்தானிய தம்பதி
ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகணத்தில் தங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிரித்தானிய தம்பதி ஒன்று நடக்க கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் மணல் மேட்டில் கருப்பு பை ஒன்றை பார்த்த நாய்கள் சத்தமிட்டு குரைக்கத் தொடங்கியுள்ளன.
இதனையடுத்து அந்த பிரித்தானிய தம்பதி, சந்தேகத்தின் அடிப்படையில் அந்த கருப்பு பையை திறந்து பார்த்துள்ளனர்.
அதில் ஆணின் சடலம் ஒன்று காணப்பட்டதை அடுத்து, மிரண்டுபோன அந்த தம்பதி உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணையை முன்னெடுத்தனர்.
இதில், சடலமாக மீட்கப்பட்ட நபர் சீனர் என்பதும், கொலைகாரர்கள் சீனர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அடித்தே கொல்லப்பட்ட சீனர்
மேலும், அந்த நபர் அடித்தே கொல்லப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பில் தற்போது நால்வரை அடையாளம் கண்டுள்ளதாகவும் முக்கிய குற்றவாளியை தேடி வருவதாகவும் பொலிசர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொல்லப்பட்ட நபரின் வாகனத்தில் ஜி.பி.எஸ் டிராக்கர் பயன்படுத்தியுள்ளதும், கடத்தி சென்று கொலை செய்ய ஏற்பாடு செய்ததாகவும் அந்த நால்வர் குழு பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கொல்லப்பட்ட நபர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியை பொலிசாருக்கு அடையாளப்படுத்தியதாலையே பழி தீர்த்ததாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கொலை செய்வதற்காகவே குழு ஒன்று ஐக்கிய அமீரகத்தில் சட்டத்திற்கு புறம்பாக நுழைந்ததாகவும், தொடர்ந்து தாய்லாந்துக்கு தப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைகாரர்கள் இதுவரை சிக்காத நிலையில், வழக்கின் விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அரசு தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.