
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ள வாத்தி படத்தில், சமுத்திரக்கனி, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வாத்தி திரைப்படம் இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கல்வியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஆசிரியர் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார்.
கல்வி வியாபாரமாக பார்க்கப்படுகிறது, அரசியலைவிட கல்வியில் அதிக வருமானம் கிடைக்கிறது போன்றவற்றை சொல்லும் வகையில் வாத்தி எடுக்கப்பட்டிருப்பது ட்ரெய்லர் மூலம் தெரியவருகிறது.
newstm.in