சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்ற உள்ளார் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை என்றும், இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாளான 13–ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் தொடங்கும். தினமும் காலை 5 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். மேலும் 17-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். குறிப்பாக 13 முதல் 17–ம் தேதி வரை தினமும் இரவு7 மணிக்கு படிபூஜை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் 17–ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.