கடன் தொல்லை காரணமாக மனைவியைக் கொன்று, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாதர் பகுதியை சேர்ந்த வினோத் சம்ஜிஸ்கர் (43) – சுபாங்கி தம்பதிக்கு 17 வயதில் மகள் இருக்கிறார். நேற்று காலை மகள் கல்லூரிக்கு சென்றபோது, சம்ஜிஸ்கர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதியம் உறவினர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, இருவரும் அசைவற்று, கிடப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் தற்கொலைக் குறிப்பு ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
அதில், கடன் சுமையால் மனைவியைக் கொன்றுவிட்டு தாம் தற்கொலை செய்து கொண்டாக சம்ஜிஸ்கர் எழுதியிருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in