பக்தர் ஒருவர் செருப்பு திருடுபோவதை தடுக்க செய்திருந்த ஏற்பாடு நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
புதுச்சேரி அங்காளம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்வது வழக்கம். எனவே கோவிலுக்கு வெளியேவிடும் போது தனது செருப்பு திருடப்படும் என்று யோசித்த பக்தர் ஒருவர் செய்திருந்த ஏற்பாடு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் தனது சைக்கிளின் முன் பக்க சக்கரத்துடன் காலணியை சங்கிலியுடன் இணைத்து பூட்டிவிட்டு சாமி தரிசனம் செய்ய சென்றார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
வழக்கமாக தரிசனத்திற்கு செல்வர்கள் கோயில் வாயிலில் காலணியை விட்டுச் செல்வது வழக்கம். ஆனால் எப்போது யார் செருப்பு காணாமல் போகும் என்று உறுதியாக சொல்ல முடியாது. எனவே, தனக்கு அந்த நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த காரியத்தை அந்த பக்தர் செய்துள்ளார்.
newstm.in