கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாழத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சிஜு கேப்ரியல். இவரது மகள் நயன் மரியா (16). இவர் அங்குள்ள செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு பரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனால் அவரது உடலில் எதிர்பாராத சில அலர்ஜி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் பதறிய பெற்றோர், அந்த மாணவியை இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். நயன் மரியாவுக்கு மைதா மற்றும் கோதுமையில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிடும் போதெல்லாம் அலர்ஜி ஏற்பட்டதாக அவரது நெருங்கி நண்பர் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், கொஞ்சக் காலமாக இதில் அவரது உடல்நிலை முன்னேறியுள்ளது. மைதா மற்றும் கோதுமை பொருட்களைச் சாப்பிடும்போது அவரது உடலில் ஏற்படும் அலர்ஜி சற்று குறைந்துள்ளது இதனால் நயன் மரியா கடந்த சில காலமாக அதிகப்படியான மைதாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு பரோடாட்டா சாப்பிட்டுள்ளார். இருப்பினும், மறுநாளே இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது உடலில் சில மோசமான அறிகுறிகளும் தெரிய தொடங்கியுள்ளது. இதையடுத்து, அவர் இடுக்கி மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் எதிர்பாராத விதமாக நேற்று மதியம் உயிரிழந்தார்.
மருத்துவர்கள் அனைவருமே மைதாவில் இருந்து செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றே கூறி வருகிறார்கள். மைதா மோசமானது என்று சொல்வது எளிது. ஆனால் மைதாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. மேலும் மைதாவில் இருந்து செய்யப்படும் உணவுகள் சுவையாக இருப்பதால், அதை முற்றிலுமாக சாப்பிடாமல் இருப்பது கடினமாகவே இருக்கிறது. எனவே, முற்றிலும் மைதாவை கைவிட முடியவில்லை என்றாலும் முடிந்தவரைக் குறைக்கப் பாருங்கள். உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் அதிகம் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வைத்திருங்கள்.