90 ‘ஸ் கிட்ஸ்க்கு வந்த நிலையை பாருங்க..!! மணமகள் கிடைக்க வேண்டி இளைஞர்கள் பாதயாத்திரை!

மாசியில பொண்ணு பார்த்து முடிவு செய்து வைகாசியில் திருமண தேதி குறித்த பலரது வாழ்க்கையும் இப்போது ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள் சமூகத்திலும் சொந்தக்காரர்கள் மத்தியிலும் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தவிப்பது தான்

2023 பிறந்து விட்ட நிலையில், 2 கே கிட்ஸ்கள் கூட கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகள் என குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்து விட்ட நிலையில் இன்னும் தங்களுக்கு திருமணம் ஆக மாட்டேன்கிறதே என ஏகத்த்துக்கும் புலம்பி தள்ளும் 90 கிட்ஸ்கள், தங்களின் மன வேதனையை மீம்ஸ்களாகவும் இணையத்தில் போட்டி தாக்கி வருகிறார்கள்.

இந்தநிலையில், கர்நாடக மாநிலத்தில் திருமணம் செய்யப் பெண் கிடைக்காமல் ஏராளமான இளைஞர்கள் தவித்து வருவதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

மணப்பெண் கிடைக்காத இந்த இளைஞர்கள் தற்போது நூதன முயற்சி ஒன்றைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் பாதயாத்திரை செல்ல தற்போது தீர்மானித்துள்ளனர். மாண்டியா தாலுகாவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் பாதயாத்திரை செல்ல உள்ளனர். மணமகள் வேண்டி மூன்று நாட்கள் இந்த இளைஞர்கள் அந்த கோயிலுக்குப் பாதயாத்திரையாகச் சொல்ல உள்ளனர். இந்த யாத்திரைக்குப் பிரம்மச்சாரிகள் பாதயாத்திரை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 23ஆம் தேதி அன்று இந்த பாதயாத்திரை தொடங்க உள்ளது. 30 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாதவர்கள் இந்த பாதயாத்திரை கலந்து கொள்ளலாம் என மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரையில் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக மூன்று நாட்களும் மூன்று வேளை உணவும், தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.