இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்ன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா 400 ரன்களை குவித்தது. இதையடுத்து 2வது இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலியா 91 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வின் பந்து வீச்சு முக்கிய காரணமாகும்.இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்த போட்டியில் ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.