
ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரட் பாக்கெட்டில் எலி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1ஆம் தேதி நிதின் அரோரா என்பவர் ‘பிளின்கிட்’ (Blinkit) என்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் பிரெட் பாக்கெட் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் பிரெட் பாக்கெட் டெலிவரி செய்யப்பட்டது.
பின்னர் பிரட் பாக்கெட்டை பிரிக்கும் போது அவர் அதனுள்ளே எலி ஒன்று உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த எலி அந்த பாக்கெட்டுக்குள் அங்கும் இங்குமாக ஓடியது.

அதனைத்தொடர்ந்து அந்த நபர், இதனை முழுவதுமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு புகார் தெரிவித்துள்ளார். மேலும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தை டேக் செய்தார்.
வீடியோ பெரும் வைரலானதை அடுத்து, சம்பந்தபட்ட டெலிவரி நிறுவனம் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
newstm.in