மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண், விமானப் போக்குவரத்துத் துறைச் செயலா் ராஜீவ் பன்சலுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,
உலக அளவில் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 89 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு குறைந்து தினசரி 100-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியா வரும் சா்வதேச பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறைப் புதுப்பித்துள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, கடந்த 13-ம் தேதி முதல் சீனா, சிங்கப்பூா், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய 6 நாடுகளில் இருந்தோ அல்லது அந்த நாடுகள் வழியாகவோ இந்தியா வரும் சா்வதேச விமானப் பயணிகள், தங்கள் பயணத்தைத் தொடங்கும் முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதற்கான சான்றிதழுடன் வரத் தேவையில்லை.
அவா்கள் ஏா்-சுவிதா வலைதளத்தில், தங்கள் உடல்நலம் குறித்த விவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.