
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தோழியின் கணவரை அபகரித்துவிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு அவரும், அவரது கணவரும் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பூ என்று அழைக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானி, பிரபல நடிகையாக வலம் வந்தார். பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார். இவர் அண்மையில் சோஹேல் கதுரியா என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றது. இது சோஹேல் கதுரியாவுக்கு இரண்டாவது திருமணம். அவரது முதல் திருமணத்தில் ஹன்சிகா விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

எனவே, ஹன்சிகா தனது தோழியின் முன்னாள் கணவரை அபகரித்து திருமணம் செய்துகொண்டதாக சர்ச்சை எழுந்தது. 2014 ஆம் ஆண்டு திருமணத்தில் ஹன்சிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட படங்களும் சமூக வலைதளங்களில் பரவின.
நெட்டிசன்கள் பலரும் தனது தோழியின் முன்னாள் கணவரை ஹன்சிகா அபகரித்துவிட்டதாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஹன்சிகாவின் திருமணம் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் வெளியானது.

அதில் பேசியுள்ள சோஹேல் கதுரியா, தனது முதல் திருமணம் முறிந்ததற்கு ஹன்சிகா காரணமில்லை என்று கூறியுள்ளார். ஹன்சிகா தனது தோழி என்பதால், தன்னுடைய திருமணத்தில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ஒருவரை முன்பே தெரியும் என்பதால் அவர்களது திருமண உறவு பிரிவதற்கு தான் எப்படி காரணமாக முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள ஹன்சிகா, சினிமாவில் இருப்பதால் தன்னை வில்லனாக்கிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
newstm.in