ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணிக்கட்சியான காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2023 – 24 தாக்கல் செய்யப்பட்டு, பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல அமளிகளுக்கு மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளின் மீது விமர்சனத்தையும் முன்வைத்து இருந்தார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்ததும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். தேதி குறித்த அறிவிப்புகள் இடைத்தேர்தலுக்கு பிற முடிவு செய்யப்படும் என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.