நடிகை நயன்தாரா பெயரை குறிப்பிடாமல் பிரபல நடிகை மாளவிகா மோகனன் மீண்டும் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாளவிகா மோகனன் தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்துள்ளார். அதுகுறித்து மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகை நயன்தராவை மீண்டும் சீண்டியுள்ளார்.
பேட்டியில் மாளவிகாவிடம் லேடி சூப்பர் ஸ்டார் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய போது, உண்மையாகவே எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கை இல்லை. நடிகைகளை சூப்பர் ஸ்டார் என்று மட்டும் அழைக்கலாம் என்று கூறினார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் என அழைத்தால் போதும். தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்ஸ் தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில், மருத்துவமனை காட்சியில் ஒரு நடிகை மேக்கப் போட்டு நடித்திருப்பதாக தனது விமர்சனத்தை பதிவு செய்திருந்தார். பெயர் குறிப்பிடாமல் அவர் நயன்தாராவை பேசியதால் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
அதற்கு பதில் அளித்த நயன்தாரா, மருத்துவமனை காட்சியில் மிக அழகாக மேக்கப் போட்டு இருக்க வேண்டியதில்லை தான். அதற்காக முடியெல்லாம் விரித்துப் போட்டு இருக்க முடியாது என்று கூறினார். இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன், மீண்டும் நயன்தாராவை சீண்டியுள்ளார்.
newstm.in