
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலத்தில் முக்கிய நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் மணலி, அண்ணாநகர் பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது.
சென்னை அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சி வீட்டின் உரிமையாளர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், ஆதித்யா ராம், அம்பா லால், அசோக் ரெசிடன்சி, ரெய்டன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
newstm.in