
பிரபல இந்தி நடிகர் ஜாவேத் கான் அம்ரோகி காலமானார். இவருக்கு வயது 50. கடந்த ஒரு வருடமாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியில் சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர், லகான், சக் டே இந்தியா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சக் டே இந்தியா படத்தில் சுக்லால் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.