ஐசிசி தரவரிசைப் பட்டியலில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவடைந்தது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனவே இதன் மூலம் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து 106 புள்ளி, நியூசிலாந்து 100 புள்ளி, தென் ஆப்பிரிக்கா 100 புள்ளி எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்திய அணி டி20இல் 267 புள்ளிகளும், ஒருநாள் போட்டியில் 114 புள்ளிகளும் பெற்று முதலிடத்தில் உள்ளது.
newstm.in