கேம் விளையாடுவதை தடுத்த தந்தையை 13 வயது சிறுவன் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போதெல்லாம் மொபைல் ஃபோன் இல்லாவிட்டால் குழந்தைகளால் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. பெற்றோர் தப்பித்துக் கொள்ள எடுத்த நடவடிக்கை தற்போது அவர்களுக்கே வினையாக மாறி வருகிறது.
ஏனென்றால் பெற்றோர் கூட வேண்டாம் செல்போன் போதும், அதுவும் செல்போனில் வரும் வீடியோக்கள், கேம்களால் அடுத்த சமுதாயமே சீரழிந்து வருகிறது. அதற்கு ஆதாரம் தான் சீனாவில் நடந்த சம்பவம்.
குவாங்சி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் செல்போனில் விளையாடுவதையே வழக்கமாக கொண்டிருந்தான்.
பலமுறை கண்டித்தும் கேட்காததால், செல்போனை பறித்த தந்தை, அதை மறைத்து வைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 13 வயது சிறுவன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை மிரட்டினான்.
செல்போனை தராவிட்டால் வெட்டிவிடுவேன் என்று அந்த சிறுவன் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக விசாரித்து வரும் சீன காவல்துறையினர், சிறுவனுக்கு மன நல ஆலோசனை வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
newstm.in