தமிழ் வில்லன் நடிகர் ஒருவர் தன்னை லவ் டார்ச்சர் செய்ததாக பிரபல மலையாள நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மலையாள நடிகை அஞ்சலி நாயர் நடித்துள்ளார். பெண் குழந்தைக்கு தாயான இவர், உதவி இயக்குநர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் யூ-ட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அஞ்சலி, அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். இவர் தமிழில் முதன்முதலில் நடித்தபோது, வில்லன் நடிகர் ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அவர் அப்படத்தில் வில்லன் மட்டுமல்ல இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். ஷூட்டிங் இல்லாத நேரத்திலும் நடிகையை வெளியே செல்ல அனுமதிக்காமல் அவர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாக கூறியுள்ளார்.
புரபோஸ் செய்ததோடு, அஞ்சலி நாயர் எங்கு போனாலும் பின் தொடர்ந்துள்ளார். அதிர்ச்சி தரும் தகவலாக ஒருமுறை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்தார் என்று பகீர் கிளப்பியுள்ளார் அஞ்சலி நாயர்.
தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் காவல்துறையின் உதவியை நாடியதாகவும், அதனைத் தொடர்ந்து கேரளாவுக்கே சென்றுவிட்டதாகவும் நடிகை அஞ்சலி நாயர் கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in