தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த பிப்ரவரி 5-ம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமண நாள் அன்று மண்டபத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகளும் கோலாகலமான கொண்டாட்டங்களும் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், கையில் பேனருடன் 7 பெண்கள் திடீரென உள்ளே புகுந்தனர்.
அவர்கள் ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு பேனரை பிடித்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்த தொடங்கினர். என்னவென்று விசாரிக்கையில்தான் அவர்கள் 7 பேரும் மாப்பிள்ளை சென்னின் முன்னாள் காதலிகள் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியது. அந்த பெண்கள் கைகளில் பெண்களை ஏமாற்றாதீர்கள், உண்மையாக இருங்கள் என்ற வாசகத்தை தாங்கிய பேனரை பிடித்துள்ளனர்.
பெண்களிடம் நேர்மையாக இருங்கள், எதிர்காலத்தில் அவர்கள் பழிவாங்க முடிவு செய்தால் உங்கள் நிலைமை என்னவாகும் என்று கோஷங்களை எழுப்பினர். தங்கள் முன்னாள் காதலிகளின் அதிரடி நடவடிக்கையால் திகைத்து போன மாப்பிள்ளை சென், நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் எதிர்ப்பால் கோபமடையவில்லை. கடந்த காலத்தில் ஒரு கெட்ட காதலனாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன்.
இளைமையில் முதிர்ச்சி இல்லமால் தவறுகளை செய்தேன். பல பெண்களை காயப்படுத்தினேன். காதலியை ஏமாற்றுவதை விட நீங்கள் அவர்களிடம் உண்மையாக இருங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் கடைசி வரை அவர்களை பிரிந்ததற்கான காரணத்தை வெளியே சொல்லவில்லை.