பொதுவாக ஜப்பானியர்கள் தங்களை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள்..உடல் எடையை பராமரிப்பது, அதற்கேற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவது, அதிலும் சிவப்பு இறைச்சியை குறைவான அளவிலேயே உட்கொள்வது, மீன் வகைகள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது, போன்றவைகள் காரணமாக சொல்லப்பட்டு வருகின்றன.
இதற்கு பெரும்பாலானோர் நாடுவது வெந்நீர் ஊற்றுகளைதான்.. ஜப்பானின் தனிச்சிறப்புகளில் ஒன்றுதான் இந்த வெந்நீர் ஊற்றுகள். இந்நாட்டின் வருமானத்தில் பெரும்பங்கை வெந்நீர் ஊற்றுகள் தருகின்றன.
காரணம், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இந்த வெந்நீர் ஊற்றை தேடி ஜப்பானுக்கு மக்கள் வருகிறார்களாம்.. இந்த ஊற்றுகளில் குளிக்கும்போது, ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் அதிகமாகவே கிடைப்பதாக சொல்கிறார்கள்.அந்த அளவுக்கு மருத்துவ குணாதிசயங்கள் அடங்கியதுதான் இந்த ஊற்றுகள்.. மருத்துவ பலனை முழுமையாக பெறுவதற்காக, ஆடைகளை அகற்றியே, இந்த வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பார்கள்.. ஆண்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியாக குளிப்பதற்கு இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.. கேமரா எதையும் இங்கே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. அந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அப்படிப்பட்ட இடத்தில் ஒரு கும்பல் ஒன்று இந்த வெந்நீர் ஊற்றுகளில் வட்டமடித்து கொண்டு வந்துள்ளது. கையில் சிறிய அளவிலான கேமராவை வைத்து கொள்வார்களாம்.. சிறிய அளவிலான கேமரா என்றாலும், தொலைதூரத்தில் உள்ளதையும் படம்பிடிக்கும், தொழில்நுட்பங்கள் வாய்ந்தது.
அங்கு குளிக்க வரும் பெண்களை, இந்த கும்பல் இப்படித்தான் கேமராவில் படம் எடுத்துள்ளது.. அந்த வீடியோ எடுத்து வைத்து கொண்டு, தங்களுக்குள் பார்ட்டி வைத்து, அந்த பார்ட்டில், வீடியோக்களை வெளியிட்டு பார்த்து மகிழ்வார்களாம்.. இந்த விஷயத்தை அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டனர்.. மொத்தம் 16 பேரை தட்டி தூக்கி உள்ளனர்.. கைதான பிறகுதான் தெரிந்தது, அந்த 16 பேரில், டாக்டர்கள், ஆபீஸர்களும் அடக்கமாம்.. மிகப்பெரிய நெட்வொர்க்காக இவர்கள் செயல்பட்டு வருவதால், மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்கிறார்கள்.
இவர்கள் ஒரு நாள் இரண்டு நாள் இதை செய்யவில்லை, இவர்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் கண்டுபிடித்துள்ளார். இதுவரை 10000 பெண்கள் படம்பிடிக்கட்டு உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது