ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களின் விவரங்கள் தொலைப்பேசி எண்ணுடன் தரவுகள் விற்கப்படுவதாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 80 ஆயிரம் தரவுகள், ரூ.20 ஆயிரத்திற்கு தனியார் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மூலமாக இந்த உண்மை விவரங்களை தெரியவந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுடைய சுமார் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் மொபைல் எண்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி அந்த எண்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தகவல் வைரலாகி வருகின்றது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 776 வாக்குகள் இருக்கிறது. இதில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் குடும்பங்கள் அடங்கி இருக்ககின்றது.அதில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாக்காளர்களுடைய தரவுகள் விற்பனை செய்யப்படுள்ளது தொடர்பான செய்தி புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைபேசி எண்ணுடன் தரவுகள் விற்கப்படுவதால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துவருகின்றனர்.