அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் வெற்றி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் நடித்த பாகுபலி திரைப்படம் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. முன்பு போல் இல்லாவிட்டாலும் தற்போது ஓரளவு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனக்கு அரிய நோய் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது நடிகைகள் தங்களுக்கு உள்ள உடல் ரீதியான பிரச்னைகளை வெளிப்படையாக சொல்லி வருகின்றனர். சமந்தா, ஸ்ருதிஹாசன் தங்களின் உடல் நலப்பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக கூறினர்.
தற்போது அந்தப்பட்டியலில் நடிகை அனுஷ்கா இணைந்துள்ளார். இவர் தனக்கு சிரிப்பு வியாதி இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று கேட்கத் தோன்றும்.
ஆனால் இது பெரிய பிரச்னைதான் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். சிரிக்க தொடங்கினால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருப்பேன் என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை காட்சிகள் வந்தால் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருப்பேன், அந்த நேரத்தில் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது என்று அவர் கூறியுள்ளார். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in