பிரதமர் மோடி இன்று 'ஆதி மஹோத்சவ்' விழாவை தொடங்கி வைக்கிறார்..!!

நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடி மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களது நலன்களுக்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி முன்னின்று மேற்கொண்டு வருகிறார். இதன்படி, பழங்குடியினத்தின் கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக, டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் இன்று காலை 10.30 மணியளவில் ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழா நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பழங்குடி கலாசாரம், கைவினை பொருட்கள், உணவு பொருட்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியானது மத்திய பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் இன்று தொடங்கி பிப்ரவரி 27ம் தேதி வரை நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் 200 ஸ்டால்கள் அமைக்கப்படுகிறது. இந்த மகோத்சவத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர். சர்வதேச சிறுதானியங்களுக்கான ஆண்டாக 2023ம் ஆண்டு கொண்டாடப்படும் சூழலில் பழங்குடியினரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீ அன்னா சிறுதானியமும் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.