வழுக்கை தலையால் வேலை இழந்த நபருக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு!!

வழுக்கை தலையால் வேலை இழந்த நபருக்கு நீதிமன்றம் ரூ.70 லட்சம் வழங்க உத்தரவிட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரிட்டனின் லீட்ஸ் நகரில் டேங்கோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நபர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு சொல்லப்பட்ட காரணம் மிக வித்தியாசமானது.

அதாவது 50 வயதுக்கு மேல் வழுக்கை தலையுடன் உள்ள நபர்களுக்கு இனி வேலை கிடையாது என்று அதிரடியாக அறிவித்தது அந்த நிறுவனம். இதனால் பாதிக்கப்பட்ட 61 வயதுடைய மார்க் ஜோன்ஸ் என்ற நபர் லீட்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தலையில் முடி நிறைந்திருந்த போதிலும், தான் தவறாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். தாம் வழுக்கை தலையுடன் இருப்பதால் அலுவலகத்தில் உள்ளவர்களும் அது போன்று இருப்பதை விரும்பவில்லை என்று நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்தார்.

ஆற்றல் மிகுந்த இளமையான நபர்கள் இருந்தால் வேலைகள் விரைவாகவும் தெளிவாகவும் நடக்கும் என்றும் அவர் கூறினார். இதனை ஏற்கமறுத்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடாக 71,441 பவுண்டுகள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 71 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.