அதிமுகவின் இரட்டை இலை தற்போது தாமரை இலையாக மாறிவிட்டது..!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பெரிய வலசு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி எம்.பி. பேசியதாவது , “அதிமுக தற்போது தாமரை இலையில் நிற்கிறது. இரட்டை இலை இரு இலைகளாக வெவ்வேறு திசைகளில் இன்று பயணிக்கின்றன. அந்த தாமரை இலை அதானியை தாங்கி பிடிக்கும் இலையாகிவிட்டது. ஆண்மைக்கும் மீசைக்கும் வேஷ்டிக்கும் வீரத்திற்கும் என்ன சம்பந்தம்..? நீங்க கால்ல விழுந்த சசிகலாவும், ஜெயலலிதாவும் மீசையும் வேஷ்டியுமா வச்சிருந்தாங்க..? எப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிரான பாஜக-விற்குத் துணை நிற்கும் அதிமுகவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டுமொரு முறை பெரியார் மண்ணின் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

இளங்கோவனின் அதிரடி பேச்சுக்கள் பாஜகவை ஓட ஓட விரட்டும் அதை நாம் பார்ப்போம். தமிழ்நாட்டை வடநாட்டு சக்திகளுக்கும், மாற்று சக்திகளுக்கும் அடமானம் வைக்க கூடியவர்களுக்கு இடமளிக்கக்கூடாது என மக்கள் தெளிவாக இருக்கின்றனர். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பாடுபடக்கூடிய குரல் கொடுக்க கூடிய ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிறப்பாக வெற்றியாக இருக்கும். வடக்கில் இருந்து வரும் மாற்று சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது” என பேசினார்.

முன்னதாக பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீ சரியான ஆம்பளையா இருந்தா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா, வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா, சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தா நேராக வாக்காளர்களை சந்தி.. திராணி இல்ல, தெம்பு இல்ல, எதிர்க்க சக்தி இல்ல. அண்ணா திமுகவை எதிர்க்க சக்தி கிடையாது. கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு, ஏழை மக்களை ஆங்காங்கே அழைத்து வந்து, 120 இடத்துல கொட்டகை அமைச்சு அமர வச்சிருக்கீங்க” என பேசினார் என்பது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.