சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை 7 நாட்களுக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசயம்..!!

டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீட்டில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது வீட்டில் வாஷிங் ஓடிக்கொண்டிருந்தது. வாஷிங் மெஷினுக்குள் துணிகள் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்து விளையாடிக் கொண்டிருந்தான். மெஷினுக்குள் இருக்கும் துணிகளை எடுக்க முயன்ற அந்த குழந்தை வாஷிங் மெஷினில் தவறி விழுந்துள்ளது. சுமார் 15 நிமிடங்கள் சோப்பு நீரில் மூழ்கியிருந்த நிலையில் தாய் கண்டுபிடித்துள்ளார்.

பின்னர் குழந்தை மீட்கப்பட்டு, சுயநினைவின்றி, பேசமுடியாத நிலையில், குளிர் மற்றும் மூச்சுத்திணறல் சிரமத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

குழந்தை 7 நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கோமாவில் இருந்தது மற்றும் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு 12 நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த குழந்தை, தனது தாயை அறிந்து பேசியது, இது பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தாய் அறையை விட்டு வெளியே சென்றபோது, வாஷிங் மெஷினின் மூடி திறந்திருந்ததால் சேரில் ஏறி குழந்தை தவறி அதில் விழுந்திருக்கலாம் என தாய் கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங் மெஷிசினில் தவறி விழுந்து 19 நாள் போராட்டத்திற்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய குழந்தை தற்போது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குழந்தையின் தாய், உறவினர்கள் உள்பட அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.