பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா. புஷ்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் ராம்சரண் -சமந்தாவுடன் ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வலைதளத்தில் பகிர்ந்து கணவருடன் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு ரசிகர் ஒருவர் , அப்படியெல்லாம் இல்லை . அவரிடம் நிறைய பணம் இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அனுசியா, அது என்னடா தம்பி அப்படி சொல்லிவிட்டாய். அவரிடம் எவ்வளவு இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? ஏன் என்னிடம் பணம் இல்லையா? கன்னத்தில் போட்டுக் கொள். இல்லாவிட்டால் உன் கன்னத்தில் செருப்பால் அடிப்பேன் என்று ஆவேசப்பட்டிருந்தார்.
அதற்கு அந்த ரசிகர், மீண்டும் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் . நீங்கள் எவ்வளவு சொன்னாலும் உண்மை உண்மைதான் என்று பதிவிட, மீண்டும் ஆவேசப்பட்ட அனுசியா, எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதே . உனக்கு என்ன தெரியும். காமாலை வந்தவன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகவே தெரியும் . உன் புத்தி பணத்தில் இருக்கிறது . அதனால் தான் பணத்தைப் பற்றியே நீ யோசிக்கிறாய். மற்ற எல்லோருக்கும் அப்படி இருக்காது. முடிந்தால் நீ நல்லவனாக மாறு என்று சொல்லி பதிலடி கொடுத்திருக்கிறார்.
நடிகைக்கும் ரசிகருக்குமான இந்த மோதல் வலைதளத்தில் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.