குஜராத் மாநிலத்தில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு வினோத சடங்கை பின்பற்றி வருகிறார்கள்.புது மாப்பிள்ளையின் வாயில் மாமியார் சிகரெட் வைக்க, மாமனார் அதை பற்ற வைக்க பின்னர் பான் மசாலாவும் கொடுத்து வரவேற்கும் முறை இருக்கிறது.
சோபாவில் அமர்ந்திருக்கும் மணமகனுக்கு மாமியார் வாயில் சிகரட்டை வைக்கிறார் . மாமனார் அந்த சிகரெட்டை பற்ற வைப்பது போல் பாவனை செய்கிறார். பின்னர் அவரே சிகரட்டை மணமகன் வாயிலிருந்து எடுத்து விடுகிறார் .
தெற்கு குஜராத்தில் சில கிராமங்களில் இந்த நடைமுறை திருமணத்தின் போது கடைபிடிக்கப்படுகிறது. மணமகன் சிகரெட்டை புகைக்கவில்லை. சம்பிரதாயத்துக்காகவே இது போன்ற சடங்கு செய்யப்படுகிறது என்கிறார்கள்.
இது குறித்த வீடியோ வெளியாகி அது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், எந்த ஊரில் நடந்தது என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், தயவு செய்து சிகரட்டை பயன்படுத்தாதீர்கள். புகை பிடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றார்கள்.