மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வினை எஸ்எஸ்சி அறிவித்தது. விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பித்தாரர்கள் விண்ணப்பித்தனர். இதனால், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதால், இணையதளம் முடங்கியது.
இயங்காத இணையதளத்தை எஸ்எஸ்சி ஆணையம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தேர்வுக்கான கடைசி தேதியை எஸ்எஸ்சி தேர்வாணையம் நீட்டித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 26ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.சி. மல்டி டாஸ்கிங் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ssc.nic.inஎன்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.